Breaking News


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

அடுத்தடுத்து ஒன்பது தடவைகளுக்கு மேல் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம்,

‘ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் ஜனாதிபதி ட்ரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் ஜனாதிபதி நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை டிரோன் விமான தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இகுறித்து அறிக்கை ஒன்றிணையும் ஈரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம்.

ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.