Breaking News


வடமராட்சி கிழக்கு குடத்தனை, பொற்பகுதி பகுதிகளில் மணல் கொள்ளையர்களை இலக்கு வைத்து நேற்று (7) நள்ளிரவு பெருமெடுப்பிலான சுற்றிவளைப்பை பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர்.

வடமராட்சி கிழக்கின் குடத்தனை, பொற்பதி பகுதிகளில் சட்டவிரோத மண்அகழ்வு கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது. இதனால் சிறியளவிலான நீர்நிலைகள் அங்கு உருவாகியுள்ளதுடன், அடுத்த கட்டமாக கடல்நீர் உள்நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவசர நடவடிக்கையெடுத்துள்ள காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனதீர, இந்தப்பகுதியில் மணல் கடத்தலை முறியடிக்க விசேட பொலிஸ் அணியொன்றை உருவாக்கினார். 30 பேர் கொண்ட அந்த அணி நேற்று நள்ளிரவு களமிறங்கியது.

அத்துடன், பொலிசார், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மணல் கொள்ளையர்களை இலக்கு வைத்து நள்ளிரவில் வேட்டையை ஆரம்பித்தனர். எனினும், யாராவது கைதானார்களா?, கடத்தல்காரர்களின் வாகனங்கள் மீட்கப்பட்டதா? போன்ற விடயங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

No comments

Note: Only a member of this blog may post a comment.