Breaking News

காதலனால் ஏமாற்றப்பட்டதால் உயிரை மாய்த்த யுவதியின் தாயாரும் உயிரிழப்பு!


காதலனால் ஏமாற்றப்பட்ட யுவதி தனது உயிரை மாய்த்துக் கொண்டதை தாங்கிக்கொள்ள முடியாத தாய், தானே எனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இந்த சம்பவம் நடந்தது.

கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவியொருவர் காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையில் கடந்த 8ம் திகதி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருந்தார். அவரது இறப்பை தாங்க முடியாமல், அவரது மரண விசாரணை நடத்து கொண்டிருந்தபோதே தாயார் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

யுத்தகாலத்தில் வன்னியில் வாழ்ந்த குடும்பம் யாழில் மீள்குடியேறியிருந்தது. நெடுந்தீவை சேர்ந்த 20 வயதான ஒரு வாலிபன் யுவதியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. சம்பவ தினத்திலன்று, தாயார் வெளியில் சென்றிருந்தார். அம்மம்மாவுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த யுவதி, பின்னர் காதலனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் அறைக்குள்ளிருந்து அழுது கொண்டிருந்திருக்கிறார்.

நீண்டநேரமாக அவரை காணாம அம்மம்மா தேடியபோது, குளியலறைக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் பொலிசார், மரண விசாரணை அதிகாரி வந்து விசாரணை நடத்து கொண்டிருந்தபோது, இழப்பை தாங்க முடியாத தாயார், அறைக்கதவை பூட்டி விட்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டினார். இதை அவதானித்த பொலிசார், அறைக்கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

எனினும், நான்கு நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி நேற்று (11) அவர் உயிரிழந்தார். கொக்குவில் கிழக்கை சேர்ந்த 48 வயதான பெண்மணியே உயிரிழந்தவராவார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.