Breaking News


வவுனியா பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் நேற்றையதினம் (08) ஆசிரியர் தாக்கி மாணவன் காயமடைந்த நிலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 6ம் தரத்தில் நேற்றையதினம் கணிதப்படம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்து மாணவன் மீது கணிதப்பாட ஆசிரியர் தடியினால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக குறித்த மாணவனின் வலது கை மற்றும் உடம்பின் பிற்பகுதியில் பல தழும்புகள் வந்துள்ளது.

அதன் பின்னர் குறித்த மாணவன் பாடசாலை நிறைவுற்றதும் வீடு சென்று வீட்டாருக்கு தழும்புகளை காட்டியுள்ளார். காயங்களை அவதானித்த பெற்றோர் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு தகவல் வழங்கியதுடன் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிலும் முறைப்பாடு செய்ததுடன் காயமடைந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியரை விசாரணைக்காக அழைப்பானை விடுத்துள்ளனர்.



No comments

Note: Only a member of this blog may post a comment.