Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 4 ஜனவரி, 2020

ஓ.எல் மாணவிகள் இருவருடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது!

  admin       சனி, 4 ஜனவரி, 2020


16 வயதான இரண்டு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு (3) நல்லதண்ணி பொலிசார் கைது செய்துள்ளனர். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வத்தேகம, பன்னில பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான ஆசிரியர், சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்து, நல்லதண்ணியில் தங்கியுள்ளார்.

தந்தை மற்றும் இரண்டு மகள்கள் என விடுதி அறையை பெற்றிருந்தனர். விடுதி மேலாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, நல்லதண்ணி பொலிசாருக்கு அறிவித்தார். இதையடுத்து, விடுதிக்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவர்களை கைது செய்தனர்.

மாணவிகள் இருவரும் இம்முறை கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றியவர்கள்.

மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் மத விவகாரங்களில் ஈடுபடும் சந்தேகத்திற்குரியவர் என்றும், இதற்கு முன்பு இரண்டு சிறுமிகளுடன் சிகிரியாவிற்கு சென்றிருந்ததும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஓ.எல் மாணவிகள் இருவருடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது!

Previous
« Prev Post