Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழர்களிற்கு சோறும், தண்ணீரும்தான் முதல் பிரச்சனை: மஹிந்தவின் கூட்டத்தில் சொன்னார் அமைச்சர்!

  admin       செவ்வாய், 14 ஜனவரி, 2020


தமிழ் மக்களிற்கு சோறும், தண்ணீரும்தானே உடனடி பிரச்சனை. அதை செய்யாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி வந்துள்ளது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

நேற்று (14) அலரி மாளிகையில் பத்திரிகை துறை சார்ந்த சிலருடன் மஹிந்த சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, கருத்து தெரிவிக்கையிலேயே, மஹிந்தானந்த இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிற்கு சோறும், தண்ணீரும்தானே உடனடி பிரச்சனை. அதை தீர்த்து விட்டுத்தானே இனப்பிரச்சனை பற்றி பேசலாம். கிளிநொச்சியில் பல இடங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லை. இதை செய்யாமல் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

சம்பந்தன், சுமந்திரன் கொழும்பில் பென்ஸ் காரும், வீடும் வாங்கி சுகமாக வாழ்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்கிறார்கள். எல்லா கூட்டமைப்பு எம்.பிக்களின் பிள்ளைகளும் வெளிநாட்டில் படிக்கிறார்கள்.

பட்டினியாக இருப்பவர்களிற்கு முதலில் சோறும், தண்ணீரும் அவசியம். அதை செய்யாமல் 70 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய யாழ்ப்பாணம் செல்கிறார். அங்குள்ள பிரச்சனைகளை பார்த்து அவர் தீர்ப்பார் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழர்களிற்கு சோறும், தண்ணீரும்தான் முதல் பிரச்சனை: மஹிந்தவின் கூட்டத்தில் சொன்னார் அமைச்சர்!

Previous
« Prev Post