Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 9 ஜனவரி, 2020

எதை அமெரிக்கா எதிர்பார்த்ததோ அதை ஈரான் கொடுத்துள்ளது...

  admin       வியாழன், 9 ஜனவரி, 2020

ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலால் டிரம்புக்கோ அல்லது உலகை ஆளும் கார்பரேட்டுக்களோ எந்த வித நஷ்டம் இல்லை

இந்த ஏவுகணை விழுந்து 80 அமெரிக்க ஏழை வீரர்கள் இறக்கும் போது
70 வயது டிரம்ப் தன் 30 வயது இளம் மனைவியுடன்  ஹாயாக டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பார்
இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மனைவிக்கு கண்ணை சிமிட்டி அந்த அசிங்கமான சிரிப்பு சிரித்திருப்பார்
அவர் டூவீட்டே சொல்லுதே யார் உயிர் இழப்பை பற்றியும் அவர் கவலைப்படல்லைனு

ஈரான் இந்த முட்டாள்தனமான தாக்குதலால் என்ன அடைந்தது தானும் ஒரு வீரன்தான் என்று உலக அரங்கில் காட்டியதை தவிர

இப்பொழுது இதையே சாக்காக வைத்து ஈராக்கில் இன்னும் படைகளை அமெரிக்கா குவிக்க போகிறது...
ஆயுத கம்பனிகளுக்கு ஆர்டர்கள் போகும்...எல்லாம் அமெரிக்க மக்கள் வரி பணத்தில்தான்.

உலகத்திலேயே அதிக பலமுள்ள ராணுவத்தை 
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுவது தற்கொலைக்கு சமன் இதைத்தான் சதாம் உசேன் செய்தார் 
ஏறக்குறைய அவரும் தற்கொலைதான் செய்துகொண்டார் மானத்தோடு.

அமெரிக்காவுடன் மோதுவது புத்திசாலித்தனமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்
கொஞ்சம் டார்வினின் தத்துவத்தை மாற்றி யோசியுங்கள் survival of the fiitest சரியா 
அந்த தியரி சரி என்றால் உலகை ஒரு காலத்தில் ஆட்சி செய்த டைனசோர்கள் எல்லாம் இப்ப எங்கே...அவர்கள்தானே அன்றய fittest
பேரழிவை அந்த உலகின் பலமுள்ள டைனசோர்களால் எப்படி சமாளிக்க முடியாமல்  போனது
அங்கே பாருங்க நம்ம எலிகளின் வாழும் தந்திரத்தை
டைனசோர் பூமியை அட்டகாசமாக ஆளும் காலத்தில் சந்து பொந்துகளுக்குள் கம்னு குடி இருந்த எலி போன்ற விலங்குகளே இன்று மனிதனாக பரிணாமம் பெற்று  உலகை ஆளுகின்றன.
இப்ப சொல்லுங்க எது புத்திசாலித்தனம் எது வாழ்வியல் முறை என்று

இந்த எலி டூ மனித பரிணாம வளர்ச்சிக்கும் ஒரு முடிவு இருக்கு அது போல அமெரிக்காவுக்கும் ஒரு முடிவு இருக்கு 
அதுவரை வெயிட்டிங் கேமே இப்போதைக்கு ஈரான் போன்ற நாடுகளுக்கு புத்திசாலித்தனம்

அன்று உலகை ஆண்ட ரோமன் கிரேக்க சாம்ராஜ்யங்கள் எல்லாம் இன்று எங்கே..
அதே போல அமெரிக்க சாம்ராஜ்யத்துக்கும் முடிவு இருக்கு
அது இயற்கை பேரழிவால் வரலாம் 
உலக மகா யுத்தத்தில் வரலாம் பெரு நோய்களால் வரலாம்
ஏலியன்களால் வரலாம்...
வரும் எப்ப வரும் என்பதுதான் கேள்வி அதுவரை கம்னு இருப்பதே நமக்கு நல்லது.

ஏன் சொல்றேன் என்றால் வரலாற்றை பாருங்க
1500 வருடம்? அமெரிக்காவுக்கு வெள்ளையர்கள் துப்பாக்கி பீரங்கியோடு படையெடுத்து போகும் போது அமெரிக்க பூர்வகுடி சிவப்பு இந்தியர்கள் அவர்களை எதிர்த்து சும்மா கத்தி, அம்பு வைச்சுண்டு சண்டை போடாமல் இருந்திருந்தால் இன்றும் அமெரிக்காவில் கணிசமான செவ்விந்தியர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள் 
பலமுள்ள வெள்ளைக்காரனை மானத்தோடு  எதிர்த்தார்கள் விளைவு உலக வரை படத்திலேயே இல்லாமல் போனார்கள்...
மில்லியன் கணக்கில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இன்று zoo போல ஏதோ ஒரு காட்சிசாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்கிறார்கள் 
கருப்பர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட பூர்வகுடி செவ்விந்தியர்களுக்கு இல்லை
இதே நிலைதான் அவுஸ்திரேலிய பழங்குடியினருக்கும்.
பலமுள்ளவனை எதிர்த்ததால் இல்லாமல் போய் விட்டார்கள்

2ம் உலக யுத்தத்தில் ஜப்பான் அமெரிக்கா தன்னை விட பலமுள்ளவன் என அறிந்ததும் சரணாகதி அடைந்த ஸ்பீடை பார்த்தீர்களா அதுதான் புத்திசாலித்தனம் என்பது...லட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானியர்களை ஒரு நிமிடத்தில் கொன்ற அமெரிக்காவை பழிவாங்கனுமா இல்லை இருக்கிறவர்களாவது வாழனுமா.

ஏன் நம்ம வீர கட்ட பொம்மன் கூட வெள்ளைக்காரனை எதிர்த்து மஞ்சள் அரைத்து கொடுத்தாயா வசனம் பேசாமல் இருந்திருந்தால் அட்லீஸ்ட் உயிரோடு தன்னும் இருந்திருப்பார்...மானமுள்ள பெண்களுக்கு பாதுகாப்பாகதன்னும் ஓரமா வாழ்ந்து விட்டு போயிருக்கலாம்.
மானம் ரோஷம் வீரம் எல்லாம் எம்மை விட பலவீனமாவர்களுடன்தான் எல்லோரும் காட்டுகிறார்கள்...காட்ட முடியும்
 
மாவீரர்கள் சேகுவேரா பிடல் காஸ்ரோ போல யாராவது ஒருத்தர் எப்பவாவது ஜொலிப்பார்கள் அதுவும் அன்றய ரசியாவின் புண்ணியத்தால்

இன்று ரசியாவும் அமெரிக்காவும் ஒன்றுதான் ....அம்பானியை போல ஆயிரம் கார்பரேட் முதலைகளை உருவாக்கி விட்டு இன்னொரு அமெரிக்காவாக ரஷியா இருக்கிறது 
1950களில் போல கொள்கைக்காக போரிடும் எண்ணத்தில் ரஷியா இல்லை அமெரிக்கா போல லாப நோக்கம் மட்டுமே.

ஆகவே survival of the fittestயை விட survival of the quietest நல்லது...மிக்சர் சாப்பிடுவதும் ஒருவகை தற்காப்பு முறைதான் தப்பில்லை 
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எதை அமெரிக்கா எதிர்பார்த்ததோ அதை ஈரான் கொடுத்துள்ளது...

Previous
« Prev Post