Breaking News


ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டபோது, பொலிசார் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்த பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.தேசபந்து தென்னக்கோனுக்கு இந்த உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டபோது பொலிசார் சரியான முறையில் செயல்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க கைது கைது நடந்தபோது, பொலிஸ் அதிகாரியை முத்தமிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

கைது செய்யப்பட்ட எம்.பி.யை இப்படி நடந்து கொள்ள அனுமதித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் திணைக்களம் நடவடிக்கையெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.