Breaking News

அஸர்பைஜான் தீவிபத்தில் இலங்கை மாணவிகள் மூவர் பலி!


அஸர்பைஜான் நாட்டு பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தொன்றில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

22 மற்றும் 23,25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர்.

அஸர்பைஜானில் உள்ள Western Caspian எனும் பல்கலைக்கழகத்திலேயே இவர்கள் கல்விகற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து அஜர்பைஜானில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் புதுதில்லியில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன” என்று அது கூறியுள்ளது.





No comments

Note: Only a member of this blog may post a comment.