Breaking News


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட பின்னர், பொலிசார் அவரை கைது செய்தனர்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04) பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.கவின் பிரமுகர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.