Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று சிறு சிறு துண்டுகளாக கிழித்து எறிவோம்! சஜித் சபதம்


பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார்.

பொதுத்தேர்தலில் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார். எங்களுக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.