Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 9 ஜனவரி, 2020

சுலைமானி கொலை வீடியோ: ரியலா?… ரீலா?வீடியோ இணைப்பு!

  admin       வியாழன், 9 ஜனவரி, 2020


ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலைமானி மீது அமெரிக்க ட்ரோன் விமானம் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் என சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

எனினும், இது சுலைமானி மீதான தாக்குதல் வீடியோ அல்ல.

இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த வீடியோ ஜனவரி 6 அன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. ஒரு நிமிடம் மற்றும் 40 விநாடிகள் நீளமான அந்த வீடியோ காட்சியில், தொடரணி ஒன்றின் மீது வானிலிருந்து தாக்குதல் நடத்தப்படுவதை போன்ற காட்சிகள் உள்ளன.

ஈராக்கில் சுலைமானியை கொன்றட அமெரிக்க ட்ரோன் தாக்குதல் என குறிப்பிட்டு, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், அது தவறானது.

அது, இராணுவ உருவகப்படுத்துதல் வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதே உண்மையாகும். சுலைமானி கொல்லப்படுவதற்கு பல வருடங்கள் முன்னரே அவை பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

AC-130 Gunship Simulator: Special Ops Squadron எனப்படும் இராணுவ உருவகப்படுத்துதல் வீடியோ கேமில் இருந்து இந்த காட்சிகள் எடுக்கப்பட்டு, சுலைமானி வீடியோவாக உலாவவிடப்பட்டுள்ளது.


இந்த காட்சிகள் இங்கே மே 25, 2015 அன்று வீடியோ கேமிங் சேனலான பைட் கன்வேயர் ஸ்டுடியோவில் ‘ஏசி -130 கன்ஷிப் சிமுலேட்டர்- கான்வாய் நிச்சயதார்த்தம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

யூரியூப் காட்சிகள் இடது பக்கமும், சுலைமானி கொலை வீடியோ என வெளியான காட்சிகள் வலது பக்கமும் உள்ளன. இரண்டும் ஒரே காட்சியென்பதை புரிந்து கொள்ள முடியும்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சுலைமானி கொலை வீடியோ: ரியலா?… ரீலா?வீடியோ இணைப்பு!

Previous
« Prev Post