Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 6 ஜனவரி, 2020

ஓ.எம்.பி ஐயும் தலைமுழுகுகிறதா அரசு?

  admin       திங்கள், 6 ஜனவரி, 2020


கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) சட்டத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை வழங்கிய சர்வதேச பொறுப்புக்கூறல் உத்தவாதத்தின் அடிப்படையில் பெரும் இழுபறியின் மத்தியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக காணாமல் போனவர்களின் அலுவலகத்தை நிறுவுவதாக அறிவித்தது. காணாமல் போன நபர்களிற்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக, குறிப்பாக போர்க்காலத்தில், அவர்களின் தரவுத்தளத்தை பராமரிப்பதற்காக, அத்தகைய ஒரு பொறிமுறையை அமைக்க 30/1 தீர்மானத்தின் ஊடாக வழியேற்படுத்தப்பட்டது.

எனினும் தற்போதைய ஆட்சியாளர்கள், அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்தபோது- அந்த சட்டமூலத்தை எதிர்த்தார்கள். இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியென அதை குறிப்பிட்டனர்.

தற்போது, காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சட்டம் இரத்து செய்யப்படுமா இல்லையா என்பது விரைவில் தெரியவருமென அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஓ.எம்.பி ஐயும் தலைமுழுகுகிறதா அரசு?

Previous
« Prev Post