Breaking News


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பௌத்த மத கொடியை நாட்டியவர் மனநலம் குன்றியவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ் நகர மையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் பௌத்த மத கொடி நாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் சர்ச்சையானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உடனடியாக செயற்பட்டு, கொடியை அங்கிருந்து அகற்றினர்.

இந்த நிலையில், அந்த கொடியை ஏற்றியவரை இன்று மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர். இவர் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும், மனநலம் குன்றியவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.