Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 3 ஜனவரி, 2020

பல்கலைகழக கல்வியை துறந்து சுயதொழில் முயற்சியாளராக மாறிய இளைஞன் மின்சாரம் தாக்கி பலி; கிளிநொச்சியில் சோகம்!

  admin       வெள்ளி, 3 ஜனவரி, 2020


கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04) காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்த போது பண்ணைக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

மங்களதேவன் விஜயகுமார் (28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மாட்டு பண்ணை ஒன்றை நடாத்தி வந்துள்ளார். பண்ணையை காலை நீரினால் சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்போது மின்தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான குறித்த இளைஞன், பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டு பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்தார்.

இவரது முயற்சியினால் பண்ணையாளராக முன்னேறி வந்த இளைஞனின் மறைவு பிரதேசத்தை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பல்கலைகழக கல்வியை துறந்து சுயதொழில் முயற்சியாளராக மாறிய இளைஞன் மின்சாரம் தாக்கி பலி; கிளிநொச்சியில் சோகம்!

Previous
« Prev Post