Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 15 ஜனவரி, 2020

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ‘வைரல் ராணி’!

  admin       புதன், 15 ஜனவரி, 2020


பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில், பகிரங்க மன்னிப்பு கோரியதையடுத்து, வென்னப்புவ பிரதேசசபையின் ஐ.தே.க உறுப்பினர் துலாக்ஷி பெர்னாண்டோ மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த திங்கட் கிழமை மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் அவர் பொலிசாரிடம் மன்னிப்பு கோரினார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் இளம் பெண்கள் இருவர் பொலிசாருடன் மல்லுக்கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓடியதையடுத்து இந்த தர்க்கம் ஏற்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதியொருவரை பொலிசார் தடுத்து நிறுத்தினர். அவரது சகோதரி துலாஷி சம்பவ இடத்திற்கு வந்து, “நான் யார் தெரியுமா?“ பாணியில் பொலிசாருடன் மல்லுக்கட்டினார்.

இருவரையும் பொலிசார் கைது செய்தனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் 14 நாட்களும், பிரதேசசபை உறுப்பினர் ஒரு மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு திங்களன்று மரவில மேலதிக மாவட்ட நீதிவான் கெமிண்டா பெரேரா முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சந்தேக நபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பெண்களை கண்டித்து, வழக்கை முடித்து வைத்தார் நீதிவான்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ‘வைரல் ராணி’!

Previous
« Prev Post