Breaking News


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதும், அவரது ஆதரவாளர்களின் பின்னணியில் பரவலாக வரையப்படும் சுவரோவியங்களில் புலியின் படத்திற்கு இடமில்லையென்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையில் சுவரோவியம் வரைந்தவர்களால் புலி ஓவியம் ஒன்று வரையப்பட்ட நிலையில், பொலிசார் மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பலவந்தமாக அந்த ஓவியத்தையும் அழிக்க வைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று முனதினம் இளைஞர்கள் ஒன்று திரண்டு சுவரோவியம் வரைந்துள்ளனர். புலியொன்றின் படத்தை அவர்கள் வரைந்திருந்தனர்.

இளைஞர்கள் படம் வரைந்து கொண்டிருந்தபோது, அங்கு பொலிசார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் திடீரென வந்திறங்கினார்கள். புலியின் படத்தை வரைய முடியாது, இதை யார் வரைய சொன்னார்கள், யார் உங்களை வழிநடத்துகிறார்கள் என மிரட்டும் தொனியில் விசாரணை நடத்தியுள்ளனர்.  அத்துடன், வரைந்த படத்தை அழிக்கும்படியும் மிரட்டியுள்ளனர்.

அந்த படத்தை அழிக்கும் வரை அங்கு நின்று மிரட்டியுள்ளனர்.

பின்னர், படம் வரைந்த இளைஞர்களின் பெயர், அடையாள அட்டை விபரங்களை பதிவு செய்துள்ளனர்.

தென்னிலங்கையில் போர் வெற்றி ஓவியங்கள் வரையப்பட்டு வரும் நிலையில், புலியென்ற விலங்கு இலங்கையில் முற்றாக தடை செய்யப்படுமா என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.