Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 8 ஜனவரி, 2020

பௌத்த மதமாகும் கன்னியா; மேல்நீதிமன்றில் கடும் வாதம்! முன்வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

  admin       புதன், 8 ஜனவரி, 2020

திருகோணமலை: கன்னியா, வென்னீரூற்றில் நடைபெறும் பௌத்த மயமாக்கலுக்கு எதிரானத் தாக்கல் செய்யட்ட வழக்கு நேற்று புதன்கிழமை காலை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளை அடுத்து மாசி மாதம் 10ஆம் நாளுக்கு முன்னதாக எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

நேற்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது திருகோணமலை வெல்கம் விகாரையின் விகாராதிபதி இந்த வழக்கில் தன்னையும் இடைபுகு மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதற்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தார். இந்த வழக்கில் வெல்கம் விகாரையின் விகாராதிபதி ஓர் அவசியமான தரப்பே அல்லர் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.

எதிர் மனுதார்களான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டத்தரணி, விகாராதிபதி வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “கடந்த தடவை இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் அதிபதி அவ்விதம் விகாராதிபதி சேர்த்துக்கொள்ளப்படுவதை ஆட்சேபித்தார். தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களம் தனது நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக்கொண்டமை ஒளித்துப் பிடித்து விளையாடுவது போல் உள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.

மூன்று தரப்பு வாதங்களையும் செவிமடுத்த மேல் நீதிபதி வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களை மாசி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி பிரசாந்தினியின் அறிவுறுத்தலில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர். கன்னியா, வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அருகே பௌத்த விகாரை ஒன்றை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

“நாம் அன்றாடப் பூசைக்காகச் சென்றபோது, புராதன பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சி அடைந்தோம். ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டபோது பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது என்று கூறினார்கள்.” என்று கன்னியா தென்கையிலை ஆதீனக் குருமுதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பின்னர் நடந்தப்பட்ட அமைதி வழிப் போராட்டத்தில் தென்கையிலை ஆதீனக் குருமுதல்வர் மீது காவல்துறை பார்த்திருக்க சுடு தேநீர் ஊற்றப்பட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பௌத்த மதமாகும் கன்னியா; மேல்நீதிமன்றில் கடும் வாதம்! முன்வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

Previous
« Prev Post