Breaking News

கென்யாவிலும் அமெரிக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல், பாரிய சேதம்

கென்யாவின் லாமு கவுண்டியில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை அல்-ஷபாப் தீவிரவாத குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க மற்றும் கென்ய இராணுவ வீரர்கள் பயன்படுத்திய முகாமே இவ்வாறு  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஆப்பிரிக்காவிற்கான அமெரிக்க இராணுவத் தளபதி அப்ரிகொம் தனது சுருக்கமான அறிக்கையில் தாக்குதல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறியுள்ளன.

அல்-ஷபாப் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.  இந்த தாக்குதல் குறித்து கென்யா பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு செஸ்னா விமானம் மற்றும் “பல” அமெரிக்க இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கென்ய செஸ்னா விமானமும் அழிக்கப்பட்டது எனவும் கென்ய பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்காமல், ஏழு விமானங்களையும் மூன்று இராணுவ வாகனங்களையும் அழித்ததாக அல்-ஷபாப் கூறியுள்ளது.  

No comments

Note: Only a member of this blog may post a comment.