Breaking News


தனது கைக்குழந்தை தவறி விழுந்ததை அறியாமல் சுமார் 7 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து திஹாரிய பகுதியில் தவறி விழுந்த 7 மாத குழந்தை, வீதியோரமாக அழுது கொண்டிருந்தது. இதை அவதானித்த ஒருவர் குழந்தையை மீட்டு, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். குழந்தையின் உடலில் சிறு காயங்கள் காணப்பட்டன.

இந்த பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் பின்னிருக்கையில் கைக்குழந்தையுடன் மனைவி உட்கார்ந்திருந்தார். கணவர் முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளார்.

பயணத்தின் இடையில், திரும்பிப் பார்த்த கணவன், பின்னிருக்கையில் மனைவி வைத்திருந்த 7 மாத குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதேவேளை, மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

மனைவியை எழுப்பி விசாரித்தபோது, அவருக்கு குழந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்பி, குழந்தை பற்றி வழியில் விசாரித்தபடி வந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியை திருப்பிய இடத்திலிருந்து 7 கிலோ மீற்றருக்கு அப்பாலிருந்த திஹாரிய பகுதியிலேயே குழந்தை பற்றி தகவல் கிடைத்தது. அதன்படி, வத்தபிட்டிவல வைத்தியசாலைக்கு சென்று, குழந்தையை அடையாளம் காட்டி பெற்றுக்கொண்டனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.