Breaking News



கைலன் வோர்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அழகி, இன்ஸ்டாகிராமில் வெகு பிரபலம். இன்ஸ்டகிராமில் அவருக்கு இரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4ம் திகதி தனது ருவிற்றர் பக்கத்தில் இட்ட பதிவில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டொலர் அனுப்ப வேண்டும். இந்த தொகை அவுஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அவருக்கு இரண்டே நாட்களில் 7 இலட்சம் டொலர் வசூல் ஆகியுள்ளது.

இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ருவீட்டின் எதிரொலியாக அவுஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 இலட்சம் டொலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அவர், கரீபியனில் விடுமுறைக்கு வந்தபோது, அவுஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட தீ பற்றி தெரிந்து வேதனை அடைந்தேன். என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை.

வேண்டுமென்றால் பணம் அனுப்புபவர்கள் அவுஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கைலன் வோர்டின் இன்ஸ்டகிராம் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய முயற்சி மூலம் காட்டுத் தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வோர்ட்டுக்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.