Breaking News



ஈரானில் பெரும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

180 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் உக்ரேனிய விமானம் ஒன்று தெஹ்ரானின் இமாம் கோமெய்னி விமான நிலையம் அருகே இன்று புதன்கிழமை விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

ஈரானிய ஊடகங்களின் செய்தியின்படி, போயிங் 737-800 ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கில் உள்ள பரந்த் அருகே வீழ்ந்து நொறுங்கியது.

உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு தெஹ்ரான் நேரம் அதிகாலை 5:15 மணிக்கு இந்த விமானம் புறப்பட்ட இருந்தது. எனினும், ஒரு மணித்தியாலம் தாமதமாக காலை 6:12 மணிக்கு புறப்பட்டபோதே விமானம் வீழ்ந்துள்ளது.

மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

No comments

Note: Only a member of this blog may post a comment.