Breaking News


18 வயதான யுவதியொருவர் குழுந்தை பிரசவித்து, குழந்தையை நிலத்தில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், துரிதமாக செயற்பட்டு குழந்தை தோண்டியெடுக்கப்பட்டதால் உயிர்பிழைத்தது. தற்போது வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

இரத்தினபுரி காங்கம, கொஸ்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று முன்தினம் (08) நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

18 வயதான யுவதி குழந்தை பிரசவிக்க இருந்த நிலையிலும், அவர் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் (8) காலை வீட்டிலேயே குழந்தையை பிரவசித்துள்ளார்.

தொப்புள்கொடியைக் கத்தியொன்றில் வெட்டியுள்ள அந்தப் பெண், பிறந்த சிசுவை வீட்டுக்கு அருகில் அரை அடி குழியொன்றைத் தோண்டிப் புதைத்துள்ளார்.

இதைக் கண்ட அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு சிசுவை மீட்டெடுத்ததுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், குழந்தை பிரவசித்த யுவதியை கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, சிசுவையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு தற்போது உடல்நலம் தேறி வருகிறது. தற்போது யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.