Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 4 ஜனவரி, 2020

16 ஆசனம் உள்ள எம்முடன்தான் ஏனைய கட்சிகள் சேரவேண்டும்! அழைக்கும் உரிமை எமக்கே என்கிறார் சுமந்திரன்

  admin       சனி, 4 ஜனவரி, 2020


வடக்கு – கிழக்கில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்ற அழைப்பை நாம் பகிரங்கமாகவே விடுத்தோம். கடந்த பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கு ஒட்டுமொத்த தமிழ் வாக்குகள் மூலம் 16 ஆசனங்களை நாம் கைப்பற்றியிருந்தோம். சிதறிய வாக்குகளால் இரு ஆசனங்கள் ஏனைய கட்சிகளுக்கு கிடைத்தன. கூடுதலான மக்களின் ஆணை எமக்கிருப்பதால் மற்றக் கட்சிகள் சேர்வதாயின் எம்முடன்தான் சேரவேண்டும். அதற்காகத்தான் நாம் பகிரங்க அழைப்பை விடுத்திருந்தோம்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரன்.

இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு சூரியன் எவ்.எம்மின் விழுதுகள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வடக்கு – கிழக்கில் மற்றக் கட்சிகள் என்று சொல்கின்றபோது, வெளியே இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளே இருந்தவர்கள். அவர்களை எவரும் வெளியே போகச்சொல்லி சொன்னமை கிடையாது. தாங்களாக வெளியேறியவர்கள்.

ஆகவே அவர்கள் திரும்ப உள்ளே வருவதற்கு எங்களுடைய கதவுகள் திறந்திருக்கின்றன என்று நாங்கள் சொல்லியிருக்கின்றோம். அதற்கு மேலே எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இ|ருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற கட்சிகள் நான் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றேன் என்று குறிப்பிடுகின்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என்று ஒரு ஒருங்கிணைப்புக் குழு இருக்கின்றது. அந்தக் குழுவின் ஊடாகத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அதிலே 3 கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இருக்கின்ற போது 4 கட்சிகள் அதிலே அங்கம் வகிக்கின்றன. எந்த ஒரு தீர்மானம் எடுத்தபோதும் அந்த நேரத்தில் இது தமிழரசுக் கட்சியின் தனித்த தீர்மானம், இது சுமந்திரனின் தன்னிச்சையான முடிவு என்று கூறி அந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் எவரும் வெளியேறிச் செல்லவில்லை. எல்லாத் தீர்மானங்களும் எடுக்கின்றபோது அவர்களும் சேர்ந்துதான் எடுத்துள்ளார்கள்.

ஆகையினாலே வேறு காரணங்களால் அவர்கள் வெளியே சென்று விட்டு எந்த முகாந்தரமும் இல்லாமல் – எந்தக் காரணத்தையும் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியாமல் – பொதுவாக இப்படியான குற்றச்சாட்டுக்கனை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது . – என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 16 ஆசனம் உள்ள எம்முடன்தான் ஏனைய கட்சிகள் சேரவேண்டும்! அழைக்கும் உரிமை எமக்கே என்கிறார் சுமந்திரன்

Previous
« Prev Post