Breaking News

UPDATE: கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தடை: வாக்குமூலம் வழங்க உத்தரவு!


கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளரை எதிர்வரும் 9ம் திகதிக்கு முன்னதாக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

—————————————————————————

வெள்ளை வாகனத்தில் கடத்தி அச்சுறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிற்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் எதிர்வரும் 9ம் திகதி வரை வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தை குற்றவியல் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பயண தடை விதித்தார்.

கடந்த திங்கட்கிழமை நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பாக சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் அளித்த புகாரைப் பெற்ற சிஐடி இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.

தூதரக ஊழியரிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டியிருப்பதால் பயணத் தடையை விதிக்குமாறு புலனாய்வாளர்கள் தலைமை நீதவான் கோரியிருந்தனர்.

சுவிஸ் தூதரகம் மற்றும் சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை ஆகியவை அந்த ஊழியரின் உடல்நிலை காரணமாக சாட்சியங்களை வழங்கக்கூடிய நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளன.

No comments

Note: Only a member of this blog may post a comment.