Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 3 டிசம்பர், 2019

நூற்றாண்டு பழமையான கோண்டாவில் ஆசிமடம் இடிந்து வீழ்ந்தது!சோகத்தில் மக்கள்!

  admin       செவ்வாய், 3 டிசம்பர், 2019

யாழ்ப்பாணம், கோண்டாவில் ஆசிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த ‘ஆசி மடம்’ என அழைக்கப்படும் இளைப்பாறு மண்டபம் மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த கனமழையின் காரணமாகவே இந்த மண்டபம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த மண்டபமானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். முன்னைய காலப் பகுதியில் கால் நடையாக மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொண்ட வேளைகளில் மக்கள் இளைப்பாறுவதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பழமையான மண்டபத்தை ஆலய நிர்வாகம் தொடர்ந்து உரிய முறையில் பராமரித்து வந்தபோதும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையால் மண்டபம் இடிந்து வீழ்ந்துள்ளது.

பழமை வாய்ந்த இந்த மண்டப அமைப்பைப் போன்றே அதே இடத்தில் புதிதாக மண்டபத்தை அமைக்கவுள்ளதாக அரசடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



(இடிந்து வீழ்வதற்கு முன்னரான தோற்றம்)

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நூற்றாண்டு பழமையான கோண்டாவில் ஆசிமடம் இடிந்து வீழ்ந்தது!சோகத்தில் மக்கள்!

Previous
« Prev Post