Breaking News

இலங்கையில் இருதேச கொள்கையை நாம் கடைப்பிடிக்கவில்லை: பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி விளக்கம்!


இலங்கையில் இரு தேச கொள்கையை தமது கட்சி கடைப்பிடிக்கவில்லையென பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தலை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மத்திய கிழக்கு, சைப்ரஸ், இலங்கையில் இரு தேச கொள்கையை கடைப்பிடிப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, அதில் திருத்தம் செய்து, மத்திய கிழக்கில் மத்திரமே அந்த கொள்கையை கடைப்பிடிப்போம் என தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். மேலும் முன்னர் மோதல் நடந்த நாடுகளான சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில், இரு அரச தீர்வுக்கான எங்கள் ஆதரவை தொடர்வோம்” என விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்திற்கான இலங்கை தூதர் மனிஷா குணசேகர, கொன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதானிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இது தொடர்பாக, பிரித்தானியாவிற்கான தூதர் மனிஷா குணசேகர தெரிவித்தபோது,

இரு அரச தீர்வு தேவைப்படும் ஒரு நாடு என்று இலங்கை குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இங்கிலாந்தில் எந்தவொரு கட்சியினதும் நிலைப்பாடு இதுவாக இல்லை. ஐக்கியப்பட்ட இலங்கையில் எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனைத்து பிரிட்டிஷ் அரசாங்கங்களும் ஆதரித்தன. எனவே இலங்கை பற்றிய கன்சர்வேடிவ் கட்சி நிலைப்பாட்டை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் பத்தி திருத்தப்பட வேண்டும்“ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் போல் ஸ்கல்லி இந்த விஷயத்தில் பின்வரும் விளக்கத்தை உயர்ஸ்தானிகருக்கு தனது மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளார்.

அதில்,

“இலங்கை தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை. முற்றிலும் தெளிவாக இருக்கிறது. இந்த பிரிவில் இரு அரச வரிசை மத்திய கிழக்கில் இஸ்ரேல்-பாலஸ்தீன நிலைமையை மட்டுமே குறிக்க வேண்டும். இலங்கை மற்றும் சைப்ரஸுடனான கடமைகள் பிளவுபட்ட சமூகங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கான தற்போதைய முயற்சிகளைத் தொடர்வதாகும்“ என்று தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.