Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கோட்டா அணியும் ஆடை தொடர்பாக கலந்துரையாடல்!

  admin       திங்கள், 2 டிசம்பர், 2019


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்த கொள்ளும்போது, அணியும் ஆடை சம்பந்தமாக கலந்துரையாடல் நடந்த தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண காற்சட்டை, சேர்ட் அணிவதையே கோட்டாபய ராஜபக்ச வழக்கமாக வைத்துள்ளார். இந்திய பயணத்தின் போதும், இந்த உடையிலேயே அவர் கலந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 3ம் திகதி மீளவும் கூடவுள்ளது. இதன்போது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, கோட்டாபய அணியும் உடை தொடர்பாகவே கலந்துரையாடல் நடந்துள்ளது. நாடாளுமன்ற சம்பிரதாயப்படி, பாரம்பரிய ஆடை, அல்லது மேற்குப்பாணி ஆடை (கோட்) அணியவே அனுமதியுண்டு. கோட்டா இரண்டும் அல்லாத பாணியில் ஆடை அணியும் வழக்கத்தை கொண்டுள்ளதால், அவரது பாணி ஆடையில் சபை அமர்வில் கலந்து கொள்ளலாமா என கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆடையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதே நாடாளுமன்ற தரப்பில் இதற்கு வழங்கப்பட்ட பதிலாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், விதிவிலக்கான ஆடைகளிற்கு அனுமதியளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளமையினால், கோட்டாவின் தற்போதைய ஆடைக்கு சபாநாயகர் அனுமதியளிப்பார் என கூறப்படுகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கோட்டா அணியும் ஆடை தொடர்பாக கலந்துரையாடல்!

Previous
« Prev Post