Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் -ரிஷாட் பதியுதீன்

  admin       திங்கள், 2 டிசம்பர், 2019


ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதனை சரி செய்து மீண்டும் மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டையில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளராக சஜித்தின் வெற்றிக்காக நாம் பாடுபட்ட போதும் அது கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நாம் சோர்வடையவில்லை என்றும், எமது அரசியல் எழுச்சி எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றதாகவும் ரிக்ஷாட் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்படு, நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டைய ரிக்ஷாட்,

இந்த திருத்தத்தினால் ஜனாதிபதி எந்தவோர் அமைச்சையும் தாம் விரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நினைத்த மாத்திரத்தில் வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி 113 உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சியே ஆட்சியமைக்கும் என்றும், அக்கட்சியில் இருந்தே பிரதமரும் தெரிவு செய்யப்படுவார் எனவும், இதுவே தற்போதைய அரசியல் யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருக்கின்ற நான்கு மாதங்களில் நாம் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியுள்ள நிலையில், வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சிறுபான்மை சமூகம் ஒருமித்து ஒன்றுபட்டு வாக்களித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இனவாதமும் மதவாதமும் உருவெடுத்ததனால் பெரும்பான்மை மக்களின் அதிகூடியோர் ஒரு பக்கம் தள்ளப்பட்டு, சிறுபான்மை சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாயிற்று எனவும் ரிஷாட் பதியுதீன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் -ரிஷாட் பதியுதீன்

Previous
« Prev Post