Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 3 டிசம்பர், 2019

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரான தமிழ் பெண்ணின் கணவருக்கு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

  admin       செவ்வாய், 3 டிசம்பர், 2019


வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக பணியாளரின் வெளிநாட்டு பயணத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்திருந்ததை நேற்று குறிப்பிட்டிருந்தோம. நேற்று நடந்த வழக்கு விசாரணை தொடர்பாக மேலதிக விடயங்கள் வெளியாகியுள்ளன.

கடத்தலிற்கு முன்னதாக பெண்ணின் நடமாட்டம் குறித்த கூகிள் வரைபடங்கள், கடத்தலிற்கு பாவிக்கப்பட்ட வாகனத்தின் படங்களை சுவிஸ் தூதரகம், சிஐடியிடம் ஒப்படைத்த தகவலும் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு தமிழ் பெண் ஊழியர் ஒருவர் வெள்ளைக்கார கடத்தப்பட்டு சில மணிநேரம் தடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மனிதப்படுகொலை விசாரணைப்பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவிற்கு அதன் முதல் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார பின்வருமாறுதெளிவுபடுத்தினார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊடாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சிஐடி விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் அதிகாரி வெள்ளை காரில் கடத்தப்பட்டதாகவும் அவரை உள்ளேயே அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் புரிந்துள்ளதாகவும், அவரது கையடக்கத் தொலைபேசி பலாத்காரமாக பறித்து அதில் இருந்த தகவல்களை பெற்றதாகவும் சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தூதுவர் சார்பில் அந்த தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி அதில் கையொப்பம் இட்டுள்ளார்.

இதன்படி கடந்த நவம்பர் 25ம் திகதியே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதுடன் முறைப்பாடு கிடைக்கப் பெற்ற நவம்பர் 27 முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சிஐடி அதிகாரிகள் சுவிஸ் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்படும் தூதரக பெண் அதிகாரி  இலங்கை தமிழ் பெண். அவர் அந்த தூதரகத்தில் விசா அல்லது குடிவரவு விவரங்கள் தொடர்பிலான பிரிவில் சேவையாற்றியுள்ளார். அந்த பெண் தொடர்பிலான அடையாளத்தையும் முறைப்பாட்டில் போது தூதரகம் வழங்கவில்லை.

அவர் கடத்தப்பட்டது முதல் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தொடர்பில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வேறு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. கடந்த நவம்பர் 27 ஆம் திகதி என்று எழுத்து மூலம் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களில், கடத்தல் இடம்பெற்றதாக கூறப்படும் நவம்பர் 25 ஆம் திகதி பெண் அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பிலான விபரங்களை அடங்கியிருந்தன.

தூதரகத்தில் இருந்து வெளியேறிய தொடர்பில் விசேட தகவல் இருந்தது. தனது பிள்ளைகளின் பாடசாலையில் நடைபெற்ற கூட்டமொன்றிற்காக அவர் அங்கிருந்து வெளியேறி சென்றதாக தகவல்கள் உள்ளன. அப்போது ஊபர் வாடகை காரில் சென்றது உள்ளிட்ட தகவல்களுடன் சில கூகுள் வரைபடங்கள் புகைப்படங்கள் இருந்தன. அதில் ஒரு வெள்ளைக்காரின் படமும் உள்ளடக்கம்.

சிஐடி அதிகாரிகள் என கூறியர்களாலேயே கடத்தல் நடத்தப்பட்டதாக தூதரகம் அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் ஒரு தெளிவைப் பெற கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலம் மிக முக்கியமானது.

வெள்ளை வாகன கலாச்சாரம் பற்றி எம் எல்லோருக்கும் தெரியும். இந்த சம்பவத்தால் தூதரகங்களை பணிபுரியும் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையிலேயே இப்படியான ஒரு கடத்தல் சம்பவம் இடம் பெற்றிருந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கடத்தலுக்கு உள்ளதாக கூறப்படும் பெண்ணின் கணவர் ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர்களது அவர் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். அவர்களது வீடு மருதானை மாளிகாகந்த  பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அதிகாரிகள் வாக்குமூலம் பெற சென்றனர். எனினும் வீடு பூட்டப்பட்டுள்ளது.

அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரித்தபோது கடத்தலிற்குள்ளானதாக  கூறப்படும் பெண்ணின் தாய் ஆடைகளுடன் அண்மைய நாளொன்றில் வெளியேறியதாகவும், அனைவரும் வெளிநாடு செல்வதாக அவர் கூறியதாகவும் சிஐடிக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே இந்த சம்பவம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முயற்சியா என்ற சந்தேகமும் உள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இதுவரை வாக்குமூலம் வழவில்லை. தூதரகமும் அவரை முன்னிலைப் படுத்தவில்லை. அவர் கணவர், பிள்ளைகள், தாய் தொடர்பில் எந்த தகவலும் இல்லை. தொலைபேசி இலக்கங்கள் இயங்கவில்லை. அப்படியானால் ஏற்கனவே கடத்தியவர்கள் அல்லது அது சார்ந்தோரால் மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து கடத்தப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் நிராகரிக்க முடியாது.

வியன்னா உடன்படிக்கைக்கு அமைய தூதரகத்துக்குள் சென்று எம்மால் தேர்தலை நடத்த முடியாது. ஒரு தூதரகம் அந்த நாட்டின் பகுதியாகவே கணிக்கப்படும். கடத்தலுக்கு உள்ளான பெண் தொடர்பில் தகவல் இந்ல்லாததால், அந்த பெண்ணின் கணவரை தேடியபோது அவர் வேலைக்கு செல்வதில்லை என தெரியவந்தது. அவர்களுக்கு ஏதும் பிரச்சனையா, ஏன் அவர்கள் ஒளிந்துள்ளனர், ஒன்றும் தெரியாது. அந்தப் பெண் வாக்குமூலம் தந்தாலேயே எம்மால் விசாரணைகள் தொடர முடியும்.

பெண்ணின் வாக்குமூலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டால் இந்த விசாரணைகளும் வெகுவாக பாதிக்கப்படும். அவர் வெளிநாடு செல்வதால் அவரது தனிப்பட்ட பிரச்சினை தீரலாம். ஆனால் நாடு என்ற ரீதியில் தற்போது எட்டியிருக்கும் அவப்பெயர் நீங்கப் போவதில்லை. எனவே முறையான விசாரணைகளை நடத்த அவரது வாக்குமூலம் அவசியம். எனவே அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யவும்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 51(3) ஆம் உறுப்புரைக்கு அமைய அதனை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் அந்த பெண் சாட்சியாளரா, பாதிக்கப்பட்டவரா அல்லது சந்தேக நபரா என முடிவெடுக்கும் நிலையில் தற்போது விசாரணைகள் இல்லை. அப்படியானால் குற்றவியல் சட்டத்தின் 7ம் அத்தியாயத்தின் கீழ் இவ்விடயத்தை ஆராயுமாறு கோருகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிவான் லங்கா ஜயரட்ன, சிஐடியின் மனிதப் படுகொலை விசாரணை அதிகாரி ரஞ்சித் முனசிங்கவிடம் கேள்விகளை தொடுத்து விடயங்களை தெளிவு படுத்திக் கொண்டார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிவான், இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது பாரிய குற்றமாகும். எவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் முதலில் சிஐடிக்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன் என அறிவித்தார்.

அத்துடன் சம்பவத்தின் தன்மை, முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மன்று ஆராய்கிறது. இந்த சம்பவம் தொடர்பில் விடயங்களை அறிந்த பிரதான நபர்களில் ஒருவர் அந்த பெண்ணேயாவார். அவர் வெளிநாட்டுக்கு செல்வது விசாரணைகளை பாதிக்கும் என்பதை மன்று அவதானிக்கின்றது.

எனவே நேரடி சட்ட ஏற்பாடுகள் அவரின் வெளிநாட்டு பயணத்தை தடுக்க இல்லாவிடினும், குற்றவியல் சட்டத்தின் 7ம்  அத்தியாயத்தின் மீது கவனம் செலுத்தி தற்காலிகமாக அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்கிறேன்.

அவர் வாக்குமூலம் வழங்கும்வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கிறேன். எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சிஐடியின் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும். இந்த தடை உத்தரவு உடனடியாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தொலைநகல் ஊடாக அறிவிக்கவும்.

அந்தப் பெண்ணின் கணவர் கடத்தல் பற்றி சில தகவல்களை அறிந்திருந்தாலும் அவை விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் தோன்றவில்லை. எனவே அவருக்கும் பணயத்தடை விதிக்குமாறு சிஐடி விடுத்த  கோரிக்கையை நிராகரிக்கிறேன் என்றார்.

அத்துடன் வழக்கை எதிர்வரும் 9ம் திகதி ஒத்திவைத்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரான தமிழ் பெண்ணின் கணவருக்கு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

Previous
« Prev Post