Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

அரசில் சேர போனால் சுமந்திரனுக்கு மஹிந்த செருப்பால் அடிப்பார்: அம்மான் அதகளம்!

  admin       திங்கள், 2 டிசம்பர், 2019


கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர்.இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கி போயுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கி போயுள்ளனர். கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்களை சிங்கள மக்கள் தமிழ் மக்களை காப்பாற்றி விட்டனர். தமிழ் மக்கள் வெற்றி பெறவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலம் ஆகும். மகிந்த ராஜபக்ச ஒரு தமிழின பற்றாளர். வருகின்ற வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்று தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது இது நம்மை பின்னோக்கி நகர்த்தும் என கூற விரும்புகின்றேன்.2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க மக்களை தூண்டினர். அன்று அரிய சந்தர்ப்பத்தில் தமிழர்கள் காப்பற்றப்பட்டனர். சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் முன்னாள் போராளிகள் அனைவரையும் காண முடிந்திருக்க முடியாது. 30வருட யுத்ததில் தமிழர்கள் அரசியல் மீது வெறுப்புற்றிருக்கின்றனர். திருமலை, அம்பாறை மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். சர்கஸ் கயிற்றில் நடப்பது போன்றுதான் அம்பாறை தமிழர்களின் நிலையாகும். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முட்டு கொடுத்ததனால் முதுகெலும்பில்லாத கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைபின் அமைச்சர்கள் முஸ்லிம்கள் 90வீத வேலைவாய்ப்பினையும் 10வீத வேலை வாய்ப்பினை வழங்கி கூட்டமைப்பை நம்பி வாக்களித்த தமிழர்களுக்கு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். தேசியம் பேசி பேசி தமிழர்களை அழிக்கும் வேலையைதான் கூட்டமைப்பு செய்துவருகின்றனர்.

2009ம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுப்பதற்கான இறுதி கட்ட வேலைப்படுகள் நடைபெற்றவேளை இடையில் புகுந்த ஹக்கீமும் ஹரிஸும் இடையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறி குழப்பிவிட்டனர்.

அடுத்த வாரம் என்னை மகிந்த ராஜபக்ச கல்முனை விடயம் சம்பந்தமாக பேச அழைத்திருக்கிறார். பேச கூடிய நிலையில் இருக்கின்றோம். என்னுடைய சொந்த காணிக்கு அடுத்தவர்கள் வக்கீல் வைத்து வழக்கு பேசுவது போல் கல்முனை விடயத்தில் அனைவரும் மூக்கு நுழைக்க முற்படுகின்றனர். ஹரிஸ் எம்.பி இப்போதுதான் அ,ஆ படிக்க தொடங்குகிறார். நாங்கள் தலைவர் பிரபாகரனுக்கு கீழ் பல்கலைகழகமே முடித்து விட்டோம். சாதாரண முஸ்லிம் மக்கள் எங்களுக்கு எதிரியல்ல, அடுத்த பொது தேர்தலில் முழு முஸ்லிம்களும் மாறி நின்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள்.

கூட்டமைப்பு கொண்டு சென்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்கையை சஜித் பிரமதாச தூக்கி எறிந்து விட்டார். மூன்று தினங்கள் தூங்கி எழும்பிய பின்னர் பணப்பரிமாற்றத்தை பெற்று கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்கள் சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தனர்

கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர் சுமந்திரனும் கோடிஸ்வரனும் பொதுஜன பெரமுனக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் சென்றால் பிரதமர் அவர்கள் மீது செருப்பை கழற்றி வீசுவார் . தற்போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அனைத்து இடங்களிலும் கால்பதித்து வருகின்ற பொதுதேர்தலில் களமிறங்கி முயற்சி செய்தால் இரண்டு ஆசனங்களை பெற்று கொள்ளலாம். இதன்மூலம் அம்பாறைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கிடைக்கும். அப்போது தமிழர்களின் அபிவிருத்தியும் எமது கையில் அதிகாரமும் கிடைக்கும். இந்த நோக்கத்திற்க்காகவே சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியை துறந்து மஹிந்தவிடம் கூறிவிட்டு வெளியேறினேன். அப்போதுதான் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாற முடியும் என்ற நோக்கம் மாத்திரமே என்னிடம் உள்ளது என கூறினார்.

இந்த நிகழ்வில் சரீரம் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினருமான லோகேஸ்வரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் கே.நவேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் விக்னேஷ்வரன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரசில் சேர போனால் சுமந்திரனுக்கு மஹிந்த செருப்பால் அடிப்பார்: அம்மான் அதகளம்!

Previous
« Prev Post