Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

களுத்துறை, வவுனியா, நுவரெலியாவில் அதிக மழை!

  admin       ஞாயிறு, 1 டிசம்பர், 2019


கடும் மழையின் காரணமாக மில்லகந்த பிரதேசத்தில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர் மட்டம் இரத்தினபுரி பிரதேசத்தில் அதிகரித்திருந்தது. தற்பொழுது இது குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணதுகம என்ற இடத்தில் அதிகரித்திருந்த நில்வாளா கங்கை நீர் மட்டம் தற்பொழுது குறைவடைந்து வருகின்றது. களனி கங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் சராசரி மட்டத்தில் கணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியால கலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் பிம்புற மற்றும் அகலவத்த பிரதேசத்தில் 239.50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பெரியபண்டிவிரிச்சான் பிரதேசத்தில் 238 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் யோதா வாவி பிரதேசத்தில் 231 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டதில் தாரஓயா பிரதேசத்தில் 153.75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இடம்பெற்றள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹாலியல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! களுத்துறை, வவுனியா, நுவரெலியாவில் அதிக மழை!

Previous
« Prev Post