Breaking News

பொலிஸ் அதிரடிப்படை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு! சிக்கிய சந்தேகிகள்!


பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பிரதேசங்கள் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பாணந்துறை, கல்கிஸ்ஸ, ஹொரணை, ரத்கம, ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.