Breaking News

சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை



சத்தம் சந்தடி இன்றி 7 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆறவறாம் எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது.

இந்த 7 சிறை கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ் குருநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (36) என்பவரை செய்தியாளர் சந்தித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மை திடீரென கூப்பிட்டு விடுதலை செய்வதாக கூறியதாகவும் மேலதிக அறிவித்தல் வரும்வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கையெழுத்து இடுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பலர் விடுதலைசெய்யப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் எமது செய்தியாளரிடம் கூறினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.