Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட S14 ரயில் பதுளைக்கான சேவையை ஆரம்பித்தது.

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


சீனாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட Class 'S14 Chinese Power set' என்ற  #தெனுவர #மெனிகே   #நகராந்த கடுகதி ரயிலானது #கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை #பதுளை நோக்கி தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

 மெனிகேயின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் #அர்ஜுன #ரணதுங்க,  #நிமால் #சிறிபால #டி #சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைத்தனர். 

  இந்த ரயில் ஒவ்வொரு நாளும் காலை 6.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 3.27 மணிக்கு பதுளையை சென்றடையும். அதே ரயில் பதுளையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.03 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடுகதி ரயிலில் காட்சி கூடங்கள் மற்றும் முதலாம் , இரண்டாம் ஆசன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பும் பயணிகள் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ளலாம்.

முதல்தர பெட்டிகளில் 88, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 96 மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் 266 உட்பட மொத்தம் 450 பயணிகளை இந்த ரயில் கொண்டு செல்ல முடியும் 

முதல்தர பெட்டிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கான ரயில் கட்டணம் 1,700 ரூபாவும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு 1,000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கு 700 ரூபாவும் அறவிடப்படுகிறது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட S14 ரயில் பதுளைக்கான சேவையை ஆரம்பித்தது.

Previous
« Prev Post