Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 29 நவம்பர், 2019

லண்டன் கத்திக்குத்தை நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் தாக்குதல்! London Bridge terror attack

  admin       வெள்ளி, 29 நவம்பர், 2019


பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்ய முயன்றனர். அதில் தீவிரவாதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். முனனதாக அரகிலுள்ள கட்டிடம் ஒன்றிற்குள் உடலில் கட்டியிருந்த போலி தற்கொலை அங்கியை வெடிக்க வைக்கப் போவதாக மிரட்டியுள்ளார். பின்னர், சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஐவர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.


அப்போது நடந்த மல்லுக்கட்டலில், பொதுமகன் ஒருவர் தீவிரவாதியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்குள் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீவிரவாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தீவிரவாதி உயிரிழந்தார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், இதனால் பொலிசாரிற்கு பரிச்சயமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.


தாக்குதல் நடத்தியவருக்கு இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டபோது, அவர் போலி தற்கொலை உடையை அணிந்திருந்தார்.

தாக்குதல் நடத்தியவர் பயங்கரவாத குற்றங்களிற்காக முன்னர் சிறையில் இருந்தவர். விடுவிக்கப்பட்டபோது, மின்னணு குறிச்சொல் அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தாக்குதலை நடத்தியபோது அந்த நபர் இரண்டு கத்திகளை வைத்திருந்தார்.
London Bridge terror attack
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! லண்டன் கத்திக்குத்தை நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் தாக்குதல்! London Bridge terror attack

Previous
« Prev Post