Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

வழக்கம்போல ‘யாருமே எதிர்பாராத முடிவை’ இன்று எடுக்கும் தமிழ் அரசு

  admin       சனி, 2 நவம்பர், 2019


இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (3) காலை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற முடிவை தமிழ் அரசுக்கட்சி தீர்மானிக்கவுள்ளது.

தமிழ் அரசுக்கட்சியின் தலைமை ஐ.தே.கவையே நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்ற தற்போதைய நிலைமையின் அடிப்படையில், கட்சி மற்றும் கூட்டமைப்பை அந்த நிலைமையை நோக்கி தள்ளிச் செல்ல இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் வெற்றியளித்ததாக கட்சி கருதுகிறது. இதனால் இனிமேல் முடிவை பகிரங்கமாக அறிவிக்க கட்சி தலைமை தீர்மானித்துள்ளது.

ஐ.தே.கவை ஆதரிப்பதென தமிழ் அரசுக்கட்சியின் தலைமை இரகசியமாக தீர்மானித்திருந்தபோதும், அது குறித்து இதுவரை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டிருக்கவில்லை. ஐந்து கட்சிகளின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை. இந்த நிலையில், தமது முடிவை எடுத்து விட்டு, அதை நோக்கி மற்றவர்களை தள்ளிச் செல்லும் முயற்சி தொடர்பான சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

கடந்தமுறை ஐ.தே.க அரசை ஆதரித்தமைக்காக தமிழ் அரசுக்கட்சியின் மூன்று பிரமுகர்கள் சில “அனுகூலங்களை“ பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த “அனுகூலங்களின்“ அடிப்படையிலேயே முந்திரிக்கொட்டை தனமாக, தமிழ் அரசுக்கட்சி இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக கூட்டமைப்பிற்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, ஐந்து கட்சிகளின் கூட்டறிக்கையில் உள்ளக்கப்பட்டிருந்த பெரும்பாலான விடயங்களை சஜித் நிராகரித்திருந்ததுடன், ஐந்து கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவும் மறுத்திருந்தார். இந்த நிலையில், கூட்டுச் செயற்பாட்டை தவிர்த்து, தமிழ் அரசுக்கட்சி தனித்து செயற்பட முனைவதன் பின்னணி குறித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசுக்கட்சியின் தலைமைக்கும் கடந்த சில வருடங்களாக இருந்த நெருக்கம், வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில், ஐதேகவையே தமிழ் அரசுக்கட்சி ஆதரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத முடிவை எடுப்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வழக்கம்போல ‘யாருமே எதிர்பாராத முடிவை’ இன்று எடுக்கும் தமிழ் அரசு

Previous
« Prev Post