Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள் சந்திரிகா குழுவினர்!

  admin       சனி, 2 நவம்பர், 2019


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அண்மைய நடவடிக்கைகளினால், தற்போதைய ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன கடுமையாக கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. சந்திரிகாவை கட்சியை விட்டு நீக்கும் பரிந்துரையை மைத்திரியே சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சுதந்திரக்கட்சியின் தற்போதைய போஷகர்களில் ஒருவரான சந்திரிகா, அண்மையில் இலங்கை சுதந்திரக் கட்சி பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினூாக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டார்.

கோட்டாவை வேட்பாளராக்கக்கூடாது என ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வந்த குமார வெல்கம மற்றும் கணிசமான தொகுதி அமைப்பாளர்கள் இந்த அணியில் உள்ளனர். இந்த நடவடிக்கையால், சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரி கடுமையான கோபத்தில் உள்ளார்.

இந்த அணி மீது நடவடிக்கையெடுப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நாளை மறுநாள்- செவ்வாய்க்கிழமை சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை அழைத்துள்ளார். சந்திரிகா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி பாதுகாப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியினரை கட்சியை விட்டு நீக்கும் பரிந்துரையை அன்றைய தினம் மைத்திரியே சமர்ப்பிக்கவுள்ளார்.

அதேநாளில்- செவ்வாய்க்கிழமை- காலை இலங்கை சுதந்திரக் கட்சி பாதுகாப்பு அமைப்பின் முதலாவது மாநாடு சுகததாச உள்ளரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டை சந்திரிகா தலைமை தாங்குவார்.

இதற்கான அழைப்பு மற்றும் துண்டுப்பிரசுர விநியோகத்தில் குமார வெல்கமவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் சு.கவினரை அடையாளம் கண்டு, அன்றிரவே அதிரடி நடவடிக்கையெடுக்க மைத்திரி தரப்பு திட்டமிட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள் சந்திரிகா குழுவினர்!

Previous
« Prev Post