Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 6 நவம்பர், 2019

பிரபாகரனிற்கு எனது பெறுமதி தெரியும்; அம்மான் அளப்பறை!

  admin       புதன், 6 நவம்பர், 2019


விடுதலைப்புலிகள் செய்தால் அது கொலையில்லையா என கேள்வியெழுப்பியுள்ளார் விநாயகமூர்த்தி முரளிதரன்.

இன்று கல்முனையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தலுடன் ஐ.தே.கவிற்கு ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடமில்லாமல் போகும். கிழக்கிலும் இடமிருக்காது, வடக்கிலும் இடமிருக்காது.

ரணிலுடன் நேற்று பாசிக்குடாவில் இருந்து கதைத்திருக்கிறார்கள். யோகேஸ்வரன், சிறிநேசன் சிரித்துக் கொண்டிருக்கும் படங்கள் வந்தன. அவர்கள் என்ன மொழியில் கதைத்தார்கள் தெரியாது. யோகேஸ்வரனுக்கு சிங்களமும் தெரியாது இங்கிலீசும் தெரியாது. ஸ்ரீநேசனுக்கும் ஒன்றும் தெரியாது.

ஐ.தே.கவும் கொலை செய்தான். சு.கவும் கொலை செய்தான். விடுதலைப்புலிகளும் கொலை செய்தார்கள். ஏன் நாங்கள் செய்தால் கொலையில்லையா? ஒரே இரவில் ஆனையிறவில் 2500 பேரை கொன்றோம். அது கொலையில்லையா?
நான் ஒரு போதும் பிரபாகரனை குற்றம்சொல்லவில்லை. அதேபோல, பிரபாகரனும் என்னை குற்றம்சொல்லவில்லை. அவருக்கு எனது பெறுமதி தெரியும். நான் சொன்ன ஆலோசனைகளை கேட்டிருந்தால் அனைவரும் உயிரோடு இருந்திருப்பார்கள் என்றார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரபாகரனிற்கு எனது பெறுமதி தெரியும்; அம்மான் அளப்பறை!

Previous
« Prev Post