Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 5 நவம்பர், 2019

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நான் ஏன் விலகினேன்? தன்னிலை விளக்கும் கருணா!

  admin       செவ்வாய், 5 நவம்பர், 2019


இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றி கொள்ள முடியும் என்ற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நான் வெளியேறினேன் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் கொண்டிருந்தேன். ஆகவே தான் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றி கொள்ள முடியும் என்ற நோக்கத்துடனே நோர்வே போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்தேன் எனவும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்தும் அந்த செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்ததாக கூறப்படுவது மிகவும் தவறான விடயமாகும்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் மாத்திரமே காட்டிக் கொடுத்தார் என விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை.

இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை வெற்றி கொள்ளலாம் என்ற எனது அந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை. 

அதனால் தான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நான் வெளியேறினேன் எனவும் அந்த ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் விடுதலைப் போராட்டம் தொடர்பாக அறியாத சிலரே, நான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக பிரசாரம் செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நான் ஏன் விலகினேன்? தன்னிலை விளக்கும் கருணா!

Previous
« Prev Post