Breaking News

தமிழ் பெயர்ப்பலகைகள் உடைக்கப்பட்டதற்கு இதற்காகத்தான்: மஹிந்த பதற்றம்!


நாட்டின் சில பகுதிகளில் தமிழ் மொழியிலான பெயர்ப்பலகைகள் சேதமாக்கப்பட்டது, இந்தியாவுடனான தமது உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என மஹிந்த நம்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச இந்திய பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸ் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட மஹிந்த ராஜபக்ச, இந்த விடயத்தில் உடனடி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இடைக்கால அரசுக்கும், தமிழ் மக்களிற்குமிடையில் பிளவு ஏற்படுத்துவதையும், இலங்கை-இந்தியா உறவுகளைத் உடைப்பதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை இது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை யாரும் கைதாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.