Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறினால்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறினால் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்களான நாடாளுமன்றம், மாகாண சபைகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் இராணுவ மயப்படுத்தப்பட்டுவிடும் என்று ஐக்கிய இடதுசாரி முன்னணி எச்சரித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ள பல உறுப்பினர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கமாட்டார் என்று குறிப்பிட்ட அரசியலமைப்பு நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பத்தி விக்ரமரட்ண, கடும்போக்குவாத ஆட்சியையே கோட்டாபய நடைமுறைப்படுத்துவார் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிவரும் ஐக்கிய இடதுசாரி முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்றைய (31) தினம் பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அரசியலமைப்பு நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் நாடு மிக மோசமான ஆபத்தை சந்திக்கும் என்று குறிப்பிட்டார்.

“கோட்டாபய ராஜபக்ச என்பவர் தனிநபர் அல்ல. அவருக்குப் பின்னால் தெளிவான நோக்கங்களைக் கொண்ட சக்திகள் உள்ளன. ஒருபுறம் கடுமையான இராணுவமயமாக்கல் குறித்த சிந்தனை கொண்டவர்களும், மறுபுறத்தில் இனவாதிகளும் இருக்கின்றனர். இந்த நாட்டில் கடுமையான ஆட்சி முறை வேண்டும் எனவும், சுதந்திரத்தை வரையறுக்க வேண்டும், அடிப்படை மனித உரிமைகளினால் பிரயோசனமில்லை, ஜனநாயகத்திற்கு எல்லை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பேசுகிறவர்கள் அவருக்குப் பின்னால் இருக்கின்றனர். கோட்டாபய உள்ளிட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் கொடூரமான ஆட்சிமுறையை எதிர்பார்க்கலாம். ஜனநாயகம் இல்லாது செய்யப்படும், ஊடகசுதந்திரம் பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படும். பொதுஜன பெரமுனவில் ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறு தரப்பினர் இருக்கலாம். அவர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கப்படாது”.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்துள்ளதால் அந்தக் கட்சி அழிவை நோக்கி தள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கவும் அவருக்கு ஆதரவான அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சஜித் பிறேமதாசவுடன் இணையவுள்ளதாகவும் கூறினார்.

“பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டுள்ளதால் சுதந்திரக் கட்சியினர் தங்களுக்கு தாங்களே குழிதோண்டிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினர் எம்முடன் இணைகின்றனர். நட்புமிக்கு கடும்போக்கான ஒருவர் ஆட்சிக்குவந்தால் இடதுசாரி தரப்பினருக்கு நல்லது என்று சிலர் கூறுவதை அவதானித்தேன். உலகில் நட்பு ரீதியிலான கட்டளையிடும் சர்வாதிகாரிகள் ஆட்சிக்கு வந்ததில்லை. அதனை மீறி வந்தாலும் அவர் நட்புரீதியாக செயற்படுவதும் இல்லை. ஆகவே நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும் ஆட்சியே கோட்டாபய எதிர்பார்க்கின்றார். நாடாளுமன்றத்திற்கு, அரச உயர்மட்ட பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமிக்க திட்டமிட்டிருக்கின்றார். கோட்டாபயவுடன் இணைந்துள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சரத் வீரசேகர ஆகியோருக்கு உயர்பதவிகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல கடும்போக்குவாத பௌத்த பிரிவினருக்கும் உயர்பதவிகள் வழங்கப்படலாம். இன்று நீதிமன்றக் கட்டமைப்பிலுள்ள சுயாதீனத்துவம் கோட்டா ஆட்சிக்கு வந்தால் இல்லாமல் போய்விடும். எனவே கோட்டாபயவின் ஆட்சி வந்தால் பயப்படாமல் இருக்கமுடியாது”.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறினால்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Previous
« Prev Post