Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 7 நவம்பர், 2019

நேற்றும் பகிரங்க விவாதத்தை தவிர்த்து ஓடி ஒளிந்த கோட்டா!

  admin       வியாழன், 7 நவம்பர், 2019


ஜனாதிபதி வேட்பாளர்களை ஒரே மேடையில் உட்கார வைத்து, பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக பேச வைக்க நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கும் டிமிக்கி கொடுத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

பகிரங்க விவாதங்கள், கேள்வி பதில்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தவிர்த்து வரும் கோட்டாபய நேற்றைய ‘Fireside Chat’ விவாத தொடரையும் தவிர்த்தார்.

எனினும், கோட்டாவின் வீடியோ ஒன்று அங்கு திரையிடப்பட்டது. நேரடி கேள்வி பதில், விவாத நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கோட்டாவுடனான கேள்வி பதில், விவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர்கள் சஜித் பிரேமதாச, அனுர குமார திஸநாயக்க, அஜந்தா பெரேர மற்றும் ரோஹன் பல்லேவத்தே ஆகியோர் பங்கேற்றனர்.

பெரும்பாலும் பொருளாதார விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் இதில் கலந்து கொண்டனர். விவாதங்களும் விவாதங்கள் பொருளாதாரக் கொள்கையை மையமாகக் கொண்டிருந்தன.

மூன்று மணி நேரம் இந்த நிகழ்வு நடந்தது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நேற்றும் பகிரங்க விவாதத்தை தவிர்த்து ஓடி ஒளிந்த கோட்டா!

Previous
« Prev Post