Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

ரௌடிக்கும்பலால் இயக்கப்பட்ட இரகசிய சித்திரவதைக்கூடம்: ரௌடிகளை விமர்சிப்பவர்களிற்கு சித்திரவதை!

  admin       சனி, 2 நவம்பர், 2019


வென்னப்புவ பகுதியில் இரகசிய சித்திரவதைக் கூடம் நடத்திய பிரதான சந்தேகநபரான ‘ஓலு மார’வின் நண்பர் என்று கூறப்படும் ரன்மா சாமாரவையும் பொலிசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த கும்பலின் உறுப்பினர்களிற்கு பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வென்னப்புவவில் இரகசிய சித்திரவதைக்கூடம் இயங்கிய தகவல் இந்த வார ஆரம்பத்தில் வெளியாகியிருந்தது. கொலை, போதைவஸ்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் ரௌடிக்கும்பல் ஒன்றினால் இந்த சித்திரவதைக்கூடம் இயக்கப்பட்டது. தம்மை விமர்சிப்பவர்கள் மற்றும் கப்பம் பெறுவதற்காக கடத்தப்படுபவர்கள் இந்த இரகசிய சித்திரவதைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வந்தனர்.

இந்த கும்பலின் தலைவனான ஒலு மார சில தினங்களின் முன்னர் ஹெரோயினுடன் பொலிசாரிடம் சிக்கினான். ஒலு மார போதைப்பொருள் கடத்தல்காரனாகவே பொலிசாரினால் அறியப்பட்டிருந்தான். போதைப்பொருள் கடத்தல்காரனாகவே பொலிசாரால் ஒலு மார கைதாகினான். தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் வரை, போதைப்பொருள் கடத்தல்காரனாகவே பொலிசார் நினைத்திருந்தனர்.
 
விசாரணையின்போது ஒலுமாரவின் கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்டனர். இதன்போது, கையடக்க தொலைபேசியில் இருந்த காணொளிகள் சில பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தன. சிலர் அறையொன்றிற்குள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காட்சிகளே அதில் இருந்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே, சித்திரவதைக் கூடம் பற்றிய தகவல் வெளியானது.

அந்த காணொளியின் அடிப்படையில், ரன்மா சாமார கைதானான். அந்த குழுவின் மேலும் 7 ரௌடிகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ரன் சாமார என்ற நபருக்கு எதிராக ஒரு கொலை, நபர்களைத் தாக்கியது மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிலாபம் மேல் நீதிமன்றம் மற்றும் மராவில நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றது.

இந்த கும்பலை விமர்சித்ததாகக் கூறப்படும் ஒருவர் ‘ஓலு மார’வால் கடத்தப்பட்டு சிறிகம்பால சித்திரவதை அறையில் அடைக்கப்பட்டு கால்கள், கைகள் கட்டப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிலரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த ரௌடிக்கும்பலிற்கு பயந்து பொலிசாரிடம் முறையிடவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதையினால் ஏற்பட்ட காயங்களிற்கு, பொலிசாருக்கு தெரியாமல் சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தி வரப்படுபவர்கள் காயப்படுத்தப்பட்டு உப்பு, மிளகாய்த்தூய் தூவப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சித்திரவதைக்குள்ளானவர்கள், ரௌடிகளிற்கு பயந்து வாய் திறக்காமல் இருந்துள்ளனர்.

கடத்தப்பட்ட பல நபர்கள் உப்பு மற்றும் மிளகாயுடன் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கிரிமினல் கும்பலுக்கு பயந்து அவர்கள் யாரும் போலீசில் புகார் செய்ய செல்லவில்லை.

இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு இளைஞனை கடத்தி வைத்திருந்து, சித்திரவதைக்குள்ளாக்கி பணம் பறித்த விடயமும் தெரிய வந்துள்ளது.

உள்ளூர் முதலாளிகள் சிலருக்கு பணம் வழங்க வேண்டியவர்களும் கடத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவான ரௌடிகளை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரௌடிக்கும்பலால் இயக்கப்பட்ட இரகசிய சித்திரவதைக்கூடம்: ரௌடிகளை விமர்சிப்பவர்களிற்கு சித்திரவதை!

Previous
« Prev Post