Breaking News

கட்சி தாவியவரை ‘வைத்து செய்த’ உறுப்பினர்கள்… வரவு செலவு திட்டத்துடன் தனித்து நின்ற நெடுந்தீவு தவிசாளர்!


நெடுந்தீவு பிரதேசசபையின் 2020ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த சபை அமர்வின் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில் எதிராக 9 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும் பதிவாகின.

நெடுந்தீவு பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் தவிசாளர் பற்றிக் ரொஷான் அண்மையில் கட்சி தாவி, கோட்டாபய அணிக்கு சென்றார்.

கட்சியை ஏமாற்றிச் சென்ற தவிசாளருக்கு பாடம் படிப்பிக்கவுள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், வரவு செலவு திட்டத்தை கூட்டாக எதிர்த்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 3, ஐ.தே.க 1, ஈ.பி.டி.பி 3, சுயேட்சை 2 ஆகியோர் வரவு செலவு திட்டத்தை எதிர்த்தனர்.

ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

தவிசாளர் தனித்து வரவு செலவு திட்டத்தை ஆதரித்தார்.

இதேவேளை, கட்சி தாவிய தவிசாளரிற்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.