Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

யாழ் வருகிறார் சம்பந்தன்: சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் மேடையேறவும் வாய்ப்பு?

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருகிறார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிற்கு அறிவிப்பொன்றை விடுப்பதற்காக, தேர்தல் பிரச்சார கூட்டம் அல்லாமல் பிறிதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்து கொள்வாற்காக எதிர்வரும் 10ம் திகதி இரா.சம்பந்தன் யாழ் வருகிறார். சாவகச்சேரியில் நடைபெறும் நினைவு நிகழ்வில் இரா.சம்பந்தன் உரையாற்றுவார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை பகிரங்க நிலைப்பாடு எடுக்கவில்லை. கூட்டமைப்பின் நிலைப்பாடு, தென்னிலங்கையில் எதிர்மறையாக பிரச்சாரப்படுத்தப்படலாமென்பதால் ஆதரவை அறிவிப்பதை தாமதப்படுத்தி வருகிறது கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க, ரவிராஜின் நினைவு நிகழ்வை பயன்படுத்தலாமென கூட்டமைப்பின் ஒரு தரப்பு திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்துள்ளது. அதில் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்விற்கு முன்னதாக யாழில் நடக்கும் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் உரையாற்ற வேண்டுமென ஐ.தே.க விரும்புகிறது. இது குறித்து இரா.சம்பந்தனிடமும் ஐ.தே.க பிரமுகர்கள் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளனர். யாழில் ஐ.தே.கவின் மேடையேறுவதில் இரா.சம்பந்தனிற்கு ஆட்சேபணையில்லையென தெரிகிறது. அதற்கு முன்னதாக கூட்டமைப்பிற்குள் முடிவெடுத்து பகிரங்க ஆதரவை அறிவித்துவிட்டு மேடையேறலாமென இரா.சம்பந்தன் திட்டமிட்டிருந்தார்.

எனினும், கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பிரமுகர்கள் சிலர் அதை விரும்பாமல், ரவிராஜின் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

சில வேளைகளில் இரண்டு மேடைகளிலும் அடுத்த வாரத்தில் இரா.சம்பந்தன் மேடையேறவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் வருகிறார் சம்பந்தன்: சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் மேடையேறவும் வாய்ப்பு?

Previous
« Prev Post