Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 9 நவம்பர், 2019

‘ஈழத்தால் தோற்றேன் என்றபோது மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது’: எம்.ஏ.சுமந்திரன்!

  admin       சனி, 9 நவம்பர், 2019


கோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று (9) வவுனியாவில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியது. ஜனாதிபதி தேர்தல் எங்கள் முன் வருகிற போது இதற்கும் தமிழ் மக்களுக்கும் சம்மந்தம் இல்லை. இது தெற்கில் நடக்கும் ஒரு அரசியல் போட்டி இதில் எங்களை ஈடுபடுத்த தேவையில்லை என்ற பரப்புரை தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படுகிறது. இது எப்பொழுதும் செய்யப்பட்டது. ஆனால் சென்ற தேர்தலில் மக்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூடுதலான வாக்குகள் கிடைத்தமையால் தான் மற்றைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்ச கூடிய வாக்கு பெற்ற போதும் மைத்திரிபால சிறிசேன வெல்லக் கூடியதாக இருந்தது. அப்பொழுது மஹிந்த ராஜபக்ச சொன்ன கருத்து ஈழம் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். கேட்க மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நான் இவர்களை தோற்கடித்து விட்டேன். இனி தமிழ் தேசியம் என்ற ஒன்று கிடையாது. தமிழ் மக்களுடைய உரித்துக்கள் என்று எதுவும் கிடையாது. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன். அரசியல் உரித்துக்கள் என்று பிறிதாக எதுவும் இந்த நாட்டில் இல்லை. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு இருந்தவர் தேர்தலில் தோற்று இது ஈழத்தில் வாக்குகளால் அடைந்த தோல்வி என்பதை ஒப்புக் கொண்டார்.

நாங்கள் தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருககிற ஒரு அரசியல் கட்சி. அரசியல் கட்சிகளினுடைய கூட்டமைப்பு. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெட்டத்தெளிவாக தெரியும். எங்களுடைய மக்களுக்கும் தெரியும். இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதும் அரசியல் வித்தகர்கள் சொல்வதைப் போல் நாங்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனில் முடிவு என்ன?. இந்த நாட்டினுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல். நாங்கள் வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் விட்டாலோ ஒருவர் வெல்லத்தான் போகிறார்.

தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக எவரும் வெற்றி பெறாமல் இருக்கப் போவதில்லை. அதிலும் இரண்டு பேரில் ஒருவர் தான் வெல்லப் போகிறார். மிகுதி 32 பேருக்கும் தாங்கள் வெல்வதற்காக போட்டியிடவில்லை என்பது தெரியும். நாங்கள் வாக்களிக்காமல் விட்டால் யார் வெல்லுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்ப இந்த கட்டுரையாளர்கள் எல்லாம் எதை விரும்புகிறார்கள். யார் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். எங்களுக்கு வாரவாரம் இலவசமாக ஆலோசனை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு இது தெரியாதா? ஆகவே அந்த வெற்றிக்காக தானா இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

தெரிவு ஒன்று தான் உள்ளது. வேறு தெரிவு இல்லை. எங்களுடைய விருப்பங்கள் எல்லாம் ஏராளம் இருக்கிறது. அது வேற விடயம். எங்களுடைய விருப்புக்காக வாக்களிப்பதற்கு அங்கு தெரிவு இல்லை. வாக்களிக்காமல் விட்டால் கோட்டபாய வெல்லுவதை எவரும் தடுக்க முடியாது. வாக்களித்தாலும் அவர் வெல்லுவதை தவிர்க்க முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி இருக்கிறது. தமிழ் மக்கள் அனைவருமே சென்று வாக்களித்தால் அதை தடுக்க கூடிய நிலமை இருக்கிறது.

2005 ஆம் ஆண்டிலே நாங்கள் ஒரு பாடத்தை படித்தோம். சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகார பகிர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய சிந்தனை. இதில் மாற்றம் இல்லை. 2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக சமஸ்டி என்று போட்டு தேர்தலில் போட்டியிட்டார். இன்று எவரும் சொல்லுவதில்லை. நான் அதை சொல்லவில்லை என்று தான் எல்லோரும் துடித்து துடித்து சொல்கிறார்கள். சமஸ்டி என நான் எவருடனும் பேசவில்லை என சஜித் பிரேமதாச சொல்கிறார். ஏனென்றால் சமஸ்டி பற்றி பேசினேன் என்றாலே தோற்று விடுவேன் என்ற பயம். அன்றைக்கு ரணில் சொல்லி போடியிட்டதால் தேற்றார். ஏன் நாங்கள் வாக்களிக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு ஓகஸ்டில் சந்திரிக்கா அம்மையார் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தார். அதில் ஒற்றையாட்சியை முற்றாக தவிர்த்து சமஸ்டி என்று சொல்லா விட்டாலும் முழுக்க முழுக்க சமஸ்டி அப்படையிலான திட்டம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டிலும், 2005 ஆம் ஆண்டிலும் எங்களுக்கு சரியான தீர்மானமோ அல்லது பிழையான தீர்மானமோ ஆனால் ஒரு மாற்று வழி கையில் இருந்தது. கையில் ஆயுதம் இருந்தது. அந்த நேரத்தில் அப்படியொரு தீர்மானத்தை எடுத்தோம். அது சரியாக இருக்கலாம். அல்லது பிழையாக இருக்கலாம்.

இன்று எமது கையில் என்ன மாற்று வழி இருக்கிறது. வேறு ஒரு மாற்று வழியும் இல்லாத நேரத்தில் எங்களுடைய கையில் இருக்கிற பலமான வாக்கு என்கிற ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். எங்களுடைய வாக்கு தான் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளனை நிர்ணயித்தது. அப்படியான பலமான ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு அதை பாவிக்கக் கூடாது என்கிறார்கள். அப்ப எதை பாவிப்பது. இது எதையும் அடைவதற்கான ஒரு ஆயுதமும் அல்ல. இது ஒரு கேடயம். வாள் அல்ல. எங்களை நோக்கி வீசப்படும் ஈட்டிகளை தடுப்பதற்கான ஆயுதம். எங்களை பாதுகாப்பதற்கான ஆயுதம். முதலில் அது தான் தேவை. எங்களுடைய இருப்புக்களை நாங்கள் முதலில் பிடித்து வைத்திருக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டிலும் அதைத் தான் நாங்கள் செய்தோம். ஆனால் முன்னேறினோம். நான்கு வருடத்தில் ஒன்றும் நமடக்கவில்லை என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகவியலாளருக்கு இன்னும் கூடுதலாக தெரியும். முன்னர் செய்தி எழுதுவதற்கு முன்னரே அவர்கள் சொந்த தணிக்கையில் ஈடுபட்டவர்கள். 5 வருடத்தில் அது மறந்து போச்சோ தெரியவில்லை. இப்படி எழுத்தினால் அவர்களுக்கு கோபம் வந்து விடுமோ என பயந்தவர்கள் இன்றைக்கு எங்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அந்த சுதந்திரம் ஏற்பட்டதா இல்லையா. சிலர் முன்னர் நடந்ததை மறந்து விட்டார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இடம்பெற்ற 52 நாட்கள் அதை மீள ஞாபகப்படுத்தியிருந்தது. அந்த நிலை தான் மீண்டும் வேண்டுமா?

18 ஆவது அரசியல் தீர்திருத்தததை மஹிந்த கொண்டு வந்தது எதற்காக? இந்த நாட்டில் தங்களுடைய குடும்பத்தை தவிர யாரும் ஆட்சியில் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொண்டு வந்தனர். தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக தான். 25 வருடம் ஆட்சி செய்ய வேண்டும். வாழ் முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும் என்று யோசித்தார்கள். அந்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கவிட்டால் இன்றைக்கு நிலமை என்ன?. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் நாங்கள். முழு நாடும் தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

2015 இலும், 2018 ஓக்டோபரிலும் ஜனநாயகத்தை பாதுகாத்தோம். இன்றைக்கு சில அறிஞர்கள் அவற்றை குறித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தவர்கள் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பின்கதவால் 2018 ஒக்டோபரில் ஒரு திருட்டு முயற்சி செய்தார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. இப்பொழுது இன்னொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. இதில் அவர்கள் வெற்றி பெறுவார்களாக இருந்தால் இந்த நாட்டில் தேர்தல் என்ற ஒன்றே பிறகு நடக்காது. பேரப்பிள்ளைகளுக்கு முன்னர் இந்த நாட்டில் தேர்தல் ஒன்று இருந்தது என்று கதை தான் சொல்ல வேண்டி வரும். பிறகு தேர்தல் நடக்காது. இரண்டு தடவை தவற விட்டு விட்டோம். இந்த முறை விடக்கூடாது என மஹிந்த அணியினர் இருக்கின்றனர். இந்த முறை பிழை விடாது தேர்தலில் வென்று விட வேண்டும். வென்று விட்டால் அந்த கதிரையை விட்டு இனி அசைவதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள்.

சஜித் பிரேமதாச தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை சொல்லியிருக்கிறார்கள். சொல்லுவது எல்லாவற்றையும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இல்லை. ஆனால் குறைந்தது அதை சொல்வதற்காக துணிவாவது இருந்திருக்கிறது. இது ஒரு பல்லினத்துவ நாடு. பல சமயங்கள் இருக்கிறது. பல மொழி பேசுகின்ற மக்கள் வாழுகிற நாடு. அந்த பல்லினத் தன்மையை நான் பாதுகாப்பேன். மற்றவர் எதுவுமே சொல்லவில்லை. அதி உச்ச அதிகார பகிர்வை நான் செய்வேன் என சொல்லியிருக்கிறார். புதிய அரசியலமைப்பு முயற்சியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார். பௌத்ததிற்கு முதலிடம் கொடுத்த போதும் சகல சமயங்களும் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதை சொல்லியாவது இருக்கிறது. அதற்கு மக்களுடைய ஆணை இருக்க வேண்டும். பின்னர் அதை நாம் பேசமுடியும். எனவே நாம் சஜித் பிரேதமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ‘ஈழத்தால் தோற்றேன் என்றபோது மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது’: எம்.ஏ.சுமந்திரன்!

Previous
« Prev Post