Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

நாலு வருட காதல் வெற்றி பெறவில்லை: சிவாஜி வேதனை!

  admin       சனி, 2 நவம்பர், 2019


பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை .ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் எவருமே படித்துகூட பார்க்கவில்லை.எனவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல் கல்முனையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது கருத்தில்,

பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை .ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் எவருமே படித்துகூட பார்க்கவில்லை.எனவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயாராக உள்ளேன்.

என்னுடைய தமிழர் தாயகத்திலேயே இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் எங்களுடைய தேர்தல் பிரச்சார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன சூழ்நிலையிலே பொதுவாக கொழும்பும் மலையகம் உட்பட பல இடங்களில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.ஆனால் அணிலை ஏறவிட்ட நாய்களாக தமிழர்கள் இருக்கின்றார்கள். காரணம் கடந்த காலத்தில் 90மூ மைத்திரியை வெற்றிபெற வைத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை.வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்கள் தலைமைகள் எம்மை ஏமாற்றி விட்டன.இது தவிர கிழக்கு மாகாணத்தை பிரிப்பதில் தமிழர் சார்பான வழக்காடிய மதியாபரணம் சுமந்திரன் என்பவர் அதை தள்ளுபடி செய்ய முயற்சித்த நிலையில் தற்போது வடகிழக்கு இணைய வேண்டும் என கூறி வருகின்மை வேதனை தருகிறது.

இதனால் தற்போது பாலஸ்தீனத்தை போன்று அம்பாறை மாவட்டம் மாறி வருகிறது. முஸ்லிம் தலைமைகள் முஸ்லீம் மக்களை ஏமாற்றுகிறது. அம் மக்களும் ஏமாறுகின்றது.எனவே சஜித் கோத்தபாய ஆகியோருக்கு தயவு செய்து வாக்களிக்க வேண்டாம் .முஸ்லிம் அடிப்படை வாதிகள் தமிழர்களின் குருதியில் நடனமாடுகின்றனர். மந்திகள் போல அரசியல் செய்யும் ரவூப் ஹக்கீம் ரிஷாட் ஹிஸ்புல்லா அல்லாஹ் மீது சத்தியம் பண்ணி வெற்றி பெறும் கட்சி பக்கம் தாவ மாட்டீர்கள் என்று சொல்ல முடியுமா? ஆனால் சிங்கள பௌத்த வீரன் யார் என்றுதான் தற்போது போட்டி நடைபெறுகிறது. சரத் பொன்சேகா நானே போரை நடார்த்தினேன் என்று கூறி எதிர்வரும் அரசாங்கத்தில் தான் பாதுகாப்பு செயலாளர் என கூறுகின்றார்.

எனவே தான் மீன் பாடும் தேன் நாட்டில் மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். கூட்டமைப்பு என கூறுபவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்துக்கு கீழால வேலை செய்கிறார்கள். வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என்பதை பகிரங்கமாக கூற விரும்புகின்றேன். இதயத்தோடு இதயமாக காதலித்த ஐக்கிய தேசிய கட்சி 4 வருடங்கள் ஒன்றுமே தமிழ் மக்களுக்கு செய்யவில்லை என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் காளத்திலே இன்னொரு புது புதுமையான விடயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சஜித் பிரேமதாச அவர்கள் கோத்தபாய ராஜபக்சவை பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என்று கேட்கிறார். இப்பொழுது நாமல் ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். நான் வருகின்றேன் என்று. நான் ஊடகங்கள் வாயிலாக இப்பொழுது சவால் விடுகின்றேன் மூவருக்கும். தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வரமுடியுமா? வடக்கு கிழக்கிலே எங்காவது சிங்கள மொழியில்லை. சரி வடக்கு கிழக்கிலே உங்களுக்கு வருவதற்கு கஸ்டமிருந்தால் கொழும்பிலோ, அல்லது சஜித் பிரேமதாசாவினுடைய இடத்திலோ, அல்லது கோத்தபாய ராஜபக்ஸவினுடைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலோ, நான் வருவதற்கு தயாராகவிருக்கின்றேன். அதே போல அனுரகுமார திஸாநாயக்க சொல்லட்டும். எந்த சிங்கள ஊருக்கு வரவேண்டுமோ நான் பொது மேடைக்கு வரத்தயார். சிங்கள மொழியிலே பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுகின்றேன். நீங்கள் வாருங்கள் அப்பொழுது எங்களுடைய தமிழ் மக்களுக்குத் தெரியட்டும்.

நாங்கள் தமிழ் மக்களுடைய வாக்குகளைப்பிரிப்பதற்காகவா போராடுகின்றோம். அல்லது. தமிழ் மக்களுக்கான நீதியைக் கோரியா போராடுகின்றோம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். என்னிலே பிழையிருந்தால் என்னை அம்பலப்படுத்துங்கள். தோற்கடியுங்கள். நான் சவால் விடுகின்றேன். மூன்று பேரும் ஒரே .இடத்தில் வரமுடியாதென்றால் சொல்லுங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இடத்திற்கும் நான் வருகின்றேன். தொலைக்காட்சிகள் பார்த்து நிற்கட்டும். என்னுடனான இந்த பகிரங்க விவாதத்திற்கு நீங்கள் தயாரா? இதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? என்று உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் முடியுமென்றால் அந்த இடத்திற்கு வருவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாகவுள்ளேன். இந்த சவாலை ஊடகங்கள் வாயிலாக சவாலாக விடுகின்றேன் .எனவே முடிந்தால் உங்கள் ஊருக்கே வருகிறேன் நேரடி விவாத்திற்கு தயாரா முடியுமா என கேள்வி எழுப்பினார்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாலு வருட காதல் வெற்றி பெறவில்லை: சிவாஜி வேதனை!

Previous
« Prev Post