Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

புலிகளிற்கு உதவியதாக கைதான மலேசியர்களிற்கு கடும் சித்திரவதை!

  admin       சனி, 2 நவம்பர், 2019


விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 12 பேரில் ஐவர் தாங்கள் தொல்லை, சித்திரவதை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக புகார் செய்துள்ளனர்.

மளிகைக் கடை உரிமையாளர் சுப்பிரமணியம் (57) மற்றும் பழைய உலோக மறுசுழற்சி பொருள் விற்பனையாளர் கலைமுகிலன் (28) ஆகிய இருவர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நேற்று நீதிபதி அசுரா அல்வி, வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் முன்னிலையில் தனியாக வாக்குமூலம் அளித்தனர்.

குற்றவியல் விதிமுறை சட்டத்தின் 131ஆவது பிரிவின் கீழ் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தமது கட்சிக்காரர் சுப்பிரமணியம் தாம் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறியதைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் மனு செய்தார்.

கைது செய்யப்பட்டு தொடர்ந்து 21 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என கூறும்படி சுப்ரமணியம் கட்டாயப்படுத்த பட்டதாகவும் கூறினார்.

பொலிசார் கேட்டுக் கொள்வதை செய்யாவிட்டால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என பல்வேறு அச்சுறுத்தலுக்கும் அவர் உள்ளானதாக தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தமது தொடர்பை ஒப்புக் கொள்ளும்படி தமது தந்தை சுப்பிரமணியத்தை பொலிசார் மிரட்டியதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் தமது ஐந்து மகன்கள் மற்றும் தமது மனைவியை விடுவிக்க மாட்டோம் என்றும் பொலிஸ் அச்சுறுத்தியதாக சுப்பிரமணியத்தின் மகன் ரவீந்திரன் மற்றும் மருமகள் திவ்யாவும் கூறினர்.

ஒக்டோபர் 10ம் திகதி அவர் கைது செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு நாங்கள் அவரை முதல் முறையாக சந்தித்தோம். அப்போது அவர் அழுதார். தமது ஐந்து மகன்களும் மற்றும் தனது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக பொலிசார் மிரட்டியதாகவும் சுப்பிரமணியன் கூறியதாக திவ்யா தெரிவித்தார்.

தமது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் பயங்கரவாதிகள் என்ற தோற்றத்தையும் அவரிடம் வெளிப்படுத்த முயன்றனர். தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர் மனோரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்தார் என திவ்யா கூறினார்.

மற்றவர்கள் 15 ஆண்டுகள் சிறையில் இருப்பார்கள் என்றும் ஆனால் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும் என்றும் தமது தந்தையிடம் பொலிசார் கூறியதாகவும் ரவீந்திரன் தெரிவித்தார் .

ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திடும்படி அவர்கள் என் தந்தையை கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் ரவீந்திரன் கூறினார்.

இதனிடையே சில குடும்ப உறுப்பினர்கள் கைதானவர்களுக்கு நேர்ந்த துயரத்தை தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு தனி இருட்டறையில் தனது கட்சிக்காரர் கலைமுகிலன் வைக்கப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் எம்.வி யோகேஷ் கூறினார்.

தமது கட்சிக்கார்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகள்போல் நடத்தப்பட்டனர் என வழக்கறிஞர் யோகேஷ் தெரிவித்தார்.

இதனிடையே தமது கட்சிக்காரர்கள் ஆர்.சுந்தரம் (52), ஒரு பாதுகாவலரான எம். பூமுகன் (26) ஸ்டோர் கீப்பர் எஸ் தனகராஜ் () ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டுமென வழக்கறிஞர் யோகேஷ் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 23ம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என நீதிபதி அஸ்மான் அமாட்‌ தெரிவித்தார்.

இதேவேளை, கைதாகியுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் மற்றும் இதர மூவரின் சார்பில் பிறிதொரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை அனுமதிப்பதா என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஷினா அயோப் தெரிவித்தார்.

ஜமீன் அனுமதி கோரியிருக்கும் அவர்களது விண்ணப்பத்திற்கு தகுதி இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக நீதிபதி ரோஷன் கூறினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! புலிகளிற்கு உதவியதாக கைதான மலேசியர்களிற்கு கடும் சித்திரவதை!

Previous
« Prev Post