Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

கோட்டாபய விவாதத்திற்கு வருவதற்கு அஞ்சுவது இதனாலேயே! மீண்டும் சஜித்!

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாபலகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இலத்திரனியல் திரையின்றி பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளதாக புதிய தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் எனது பிரதிவாதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதான வேட்பாளராக இருக்கிறார். எனவேதான் அவரை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கின்றேன். எனினும் அவர் இலத்திரனியல் திரை இன்றி பேச முடியாது என்ற அச்சத்திலிலேயே விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் இருக்கிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனித்து விவாதத்தில் கலந்துகொள்ள அச்சம் என்றால் மஹிந்த ராஜபக்ஸவையும் உடன் அழைத்து வரலாம். மஹிந்தவை மாத்திரமின்றி ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்தாலும் எனது தரப்பில் நான் தனியாகவே பங்குபற்றுவேன் எனவும் சவால் விடுத்துள்ளார். 

ஆயிரம் பேருடன் வந்தாலும் தனித்து நின்று விவாதம் செய்யும் அளவிற்கு பலமும் தைரியமும் என்னிடம் இருக்கிறது. இவ்வாறு விவாதங்களை நடத்தினால் மாத்திரமே மக்களால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியான தலைவர் யார் என்பதை தெளிவாக இனங்காண முடியும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்த நேரடி விவாத சவாலை ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டாபய விவாதத்திற்கு வருவதற்கு அஞ்சுவது இதனாலேயே! மீண்டும் சஜித்!

Previous
« Prev Post